அட தமிழ் தட்டச்சு

In English

அன்பார்ந்த அடடா பாவ‌னையாள‌ர்க‌ளே, பார்வையாள‌ர்க‌ளே;

ஏற்க‌ன‌வே உங்க‌ளுக்கு தெரிந்த‌து போல், அட‌டா வ‌லைப்ப‌திவு சேவையில் தான் முத‌ன் முத‌லிலும் ம‌ற்றும் த‌னித்துவ‌மாக‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சை நேர‌டியாக‌ செய்ய‌லாம். இது தான் நாங்க‌ள் அட‌டா வ‌லைப்ப‌திவு சேவையை அறிமுக‌ப்ப‌டுத்தும்போது இட்ட‌ முத‌ல் இடுகை. கிட்ட‌டியில், நாங்க‌ள் மிக‌வும் பிர‌ப‌ல‌ம‌டைந்து வ‌ரும் த‌மிழ்99 த‌ட்ட‌ச்சு முறையையும் சேர்த்துள்ளோம்.

த‌மிழை நேர‌டியாக‌ அட‌டா வ‌லைப்ப‌திவில் த‌ட்ட‌ச்சுத‌ல் என்ப‌து உங்க‌ளுக்கு விருப்ப‌மான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு முறையை தெரிவுசெய்த‌ல் என்ற‌ அள‌விற்கு இல‌குவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அட‌டா வ‌லைப்ப‌திவுத் த‌ள‌த்திற்கு நீங்க‌ள் வ‌ரும்போது மேல் வ‌ல‌து ப‌க்க‌த்தில் த‌மிழ் தட்ட‌ச்சு முறைக‌ள் கீழுள்ள‌து போல் காணுவீர்க‌ள்:

தமிழ் தட்டச்சு முறை ஒன்றைத் தெரிக

தமிழ் தட்டச்சு முறை ஒன்றைத் தெரிக

இருக்கும் ப‌ல‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு முறைக‌ளில், உங்க‌ளுக்கு ப‌ரீட்சைய‌மான‌ ஒரு முறையைத் தெரிவுசெய்து த‌மிழை த‌ட்ட‌த் தொட‌ங்க‌லாம். க‌ருத்து தெரிவிக்கும் இட‌த்திலோ (அ) தேடுத‌ல் இட‌த்திலோ ம‌ட்டுமின்றி வ‌லைப்ப‌திவின் ஆளுந‌ர் ப‌குதியிலும் கூட‌ த‌மிழை நேர‌டியாக‌ த‌ட்ட‌லாம். வ‌லைப்ப‌திவு ஆளுந‌ர்க‌ள் த‌மிழை அனேக‌மான‌ இட‌ங்க‌ளில் நேர‌டியாக‌ த‌ட்ட‌லாம். ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ளை உருவாக்க‌லாம் என்ப‌தால், க‌ட‌வுச்சொல் இட‌ம் ம‌ட்டும் த‌மிழ் த‌ட்ட‌ச்சு செய்வ‌து த‌விர்க்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

கீழே சில‌ ஆளுந‌ர் ப‌குதிக‌ள் காண்பிக்க‌ப்படுகிற‌து. நேர‌டியாக‌ த‌மிழை த‌ட்ட‌ச்சு செய்ய‌க்கூடிய‌ இட‌ங்க‌ளை வ‌ட்ட‌மிட்டுக் காட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

Direct Tamil Typing in Post - நேரடி தமிழ் தட்டச்சு இடுகையில்

நேரடி தமிழ் தட்டச்சு இடுகையில் - Direct Tamil Typing in Post

Direct Tamil Typing in Tag - நேரடி தமிழ் தட்டச்சு ராக் இல்

நேரடி தமிழ் தட்டச்சு ராக் இல் - Direct Tamil Typing in Tag

ஆங்கில‌த்திற்கும், த‌மிழுக்கும் மாற்றி மாற்றி த‌ட்ட‌ச்சு செய்ய‌ F12 ஐ அழுத்த‌வும்

ஆங்கில‌த்திற்கும் த‌மிழுக்கும் ஆக‌ மாறி மாறி த‌ட்ட‌ச்சு செய்த‌ல் இல‌குவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. ஒரு மொழியில் த‌ட்ட‌ச்சு செய்துகொண்டிருக்கையில் ம‌ற்ற‌ய‌ மொழியில் த‌ட்ட‌ச்சு செய்ய‌வேண்டிய‌ தேவை ஏற்ப‌டுவது இய‌ல்பு. அட‌டா வ‌லைப்ப‌திவு த‌ள‌த்தில் மொழி தாவுத‌ல் F12 ஐ அழுத்துத‌ல் என்ற‌ அள‌விற்கு இல‌குவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. நீங்க‌ள் த‌மிழை த‌ட்ட‌ச்சு செய்துகொண்டிருக்கும் போது F12 ஐ அழுத்தினால், நீங்க‌ள் ஆங்கில‌த்தில் த‌ட்ட‌லாம்; பிற‌கு மீண்டும் F12 ஐ அழுத்தினால், மீண்டும் நீங்க‌ள் தெரிவுசெய்த‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு முறையில் த‌ட்ட‌லாம் = ஒரே வ‌ரியில்!

எனக்கும் ஒரு தமிழ் வலைப்பதிவு வேண்டும்

எனக்கும் ஒரு தமிழ் வலைப்பதிவு வேண்டும்

அட‌டா வ‌லைப்ப‌திவு ஆளுந‌ர் த‌ன‌து வ‌லைப்ப‌திவில் எந்த‌ த‌ட்ட‌ச்சு முறை இய‌ல்நிலை [default] ஆக‌ இருக்க‌ வேண்டும் என்று தெரிவுசெய்ய‌லாம். ஆளுந‌ராக‌ நீங்க‌ள் தெரிவுசெய்யும் த‌ட்ட‌ச்சு முறை தான் இய‌ல்நிலையாக‌ ஒரு பார்வையாள‌ர் உங்க‌ள் வ‌லைப்ப‌திவிற்கு வ‌ந்து த‌ட்ட‌ச்சும்பொது ப‌ய‌ன்ப‌டும். ஆனால், பார்வையாள‌ர் வேறு த‌ட்ட‌ச்சு முறைக்கு மாற்றியும் த‌ட்ட‌ச்ச‌லாம். கீழே காண்பிக்க‌ப்ப‌டுகிற‌து, அட‌டா த‌மிழ் த‌ட்ட‌ச்சு ஆளுந‌ர் ப‌குதி:

ஆளுநர் தமிழ் தட்டச்சு முறையைத் தெரிக

ஆளுநர் தமிழ் தட்டச்சு முறையைத் தெரிக

நீங்க‌ள் ஒரு வ‌லைப்ப‌திவு ஆளுந‌ராக இருந்தால், ப‌ய‌ன‌ர் பெய‌ர் ம‌ற்றும் க‌ட‌வுச்சொல் ப‌ய‌ன்ப‌டுத்தி உட்புகுந்த‌ பின் கீழ் வ‌ட்ட‌ம் போட்டுக் காட்ட‌ப்ப‌ட்ட‌ இணைப்பை அழுத்த‌வும்:

ஆளூநர் உட்புகுந்த பின் இந்த இணைப்பை அழுத்தவும்.

ஆளூநர் உட்புகுந்த பின் இந்த இணைப்பை அழுத்தவும்.

Tags: