இந்த செருகல் [plugin] முழு தமிழ் சம்பந்தமான செருகல்களுக்கு பொதுவான ஒரு செருகலாக இருக்கும். சகல தமிழ் செருகல்களையும் ஒருங்கிணைத்து ஒரு இடத்தில் அவற்றின் தெரிவுகளை [options] தெரிந்தெடுக்கும் இடமாக அமையும்.
அடடா இற்குள் உள்நுழைந்த பின் Settings பகுதியில் Ada Ultimate Tamils இற்குச் செல்லவும். இவ்வளவு காலமும் தமிழிஷ், தமிழ்மணம் என தனித் தனியாக அவற்றின் தெரிவுகளை தெரிந்தெடுக்கும் பக்கங்கள் இருந்தன. இனிமேல் அவை காணப்படமாட்டா. அவற்றை இந்த புதிய Ada Ultimate Tamils இல் தெரிவுசெய்யலாம்.
மேலே உள்ள படத்தில் தமிழ்மண செருகல், எமது Ada Ultimate Tamils செருகலில் காணப்படுகிறது. இதைப் போல் தமிழிஷ் செருகலும் காணப்படுகிறது. இப்படி எதிர்காலத்தில் பல தமிழ் செருகல்களை ஒரே இடத்தில் காணலாம்.
தற்போது இந்த செருகலில் உள்ள தமிழ் செருகல்கள்:
அனேகமான செருகல்கள் தானாகவே உங்கள் வலைப்பதிவில் தோன்றும் வண்ணம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால், தமிழ்மணம் நீங்கள் இயக்கிய[enable] பின் மட்டுமே தோன்றும். தமிழ்மண பதிவுப்பட்டை, உங்கள் வலைப்பதிவின் இணைய முகவரியை அவர்களிடத்தில் சேர்த்தால் மட்டுமே தோன்றும். அதனால் தமிழ்மண செருகல், நீங்கள் இயக்கிய பின் மட்டுமே வேலைசெய்யும் வண்ணம் செய்யப்பட்டிருக்கிறது.
பல செருகல்கள் தானாக தோன்றும் வசதி உள்ளதால், சில நேரத்தில், உங்களுக்கு சில செருகல்கள் தேவையில்லை என தோன்றினால், அதை முடக்கி [disable] விடக்கூடிய வசதியும் இருக்கிறது. தனித்தனியாக செருகலை நீங்கள் இயக்கி/ முடக்கி விடலாம்.
நீங்கள் இயக்கவேண்டிய செருகல்கள்:
- தமிழ்மணம்
வருங்காலத்தில் மேலும் பல தமிழ் செருகல்களை இணைக்கவுள்ளோம். மீண்டும் இங்கு வந்து பாருங்கள்.
வருங்காலத்தில் சேர்க்கவுள்ள தமிழ் செருகல்கள்:
- தமிழர்ஸ் – எந்த இணைய முகவரியையும், அவர்கள் தளத்திற்கு, செருகல் மூலம் சேர்க்க வேலை செய்யவில்லை.