அடடா தளத்தில் உள்ள உங்கள் பதிவில் இனிமேல் வாசகர்கள் தட்டச்சு செய்து தான் கருத்து விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அடடா புத்தம் புதிதாக தட்டச்ச சிரமம்படும் வாசகர்களுக்கென்றே ஒரு புதிய வசதி தொடங்குகிறது. இனிமேல் வாசகர்கள் தங்கள் கருத்தை, ஒலி வடிவமாகவோ, (அ) காணொளி வடிவமாகவோ பதிவு செய்யலாம்.
உங்கள் கணினியில், ஒலி கருத்தை விட, ஒலி வாங்கியும் (mic); காணொளி கருத்தை விட, காணொளி வாங்கியும் (webcam) பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
சரி வாருங்கள் எப்படி ஒலி/ காணொளிக் கருத்தை விடுவது என்று பார்ப்போம்.
1)
கீழே உள்ள படத்தில் தெரிவது போல், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மற்றும் கசடு சொல் [நீங்கள் அடடா உறுப்பினர் அல்ல என்றால்], கொடுத்த பின் வட்டமிட்டுக் காட்டப்பட்ட “காணொளிக் கருத்தைச் சேர்க்க” (அ) “ஒலிக் கருத்தைச் சேர்க்க” என்பதைச் சொடுக்குங்கள். நீங்கள் ஒலிக் கருத்தை விட விருப்பமென்றால், “ஒலிக் கருத்தைச் சேர்க்க” என்பதைச் சொடுக்குங்கள். காணொளிக் கருத்தை விட விருப்பமென்றால் “காணொளிக் கருத்தைச் சேர்க்க” என்பதைச் சொடுக்குங்கள்.
2)
கீழே உள்ள படம் போல், உங்கள் கணினியில் உள்ள ஒலி வாங்கி (mic) அல்லது காணொளி வாங்கியை (webcam) உபயோகிக்க உங்கள் அனுமதி கேட்கப்படும். உங்கள் உபகரணத்தை உபயோகித்து ஒலி (அ) காணொளியை பதிய உங்கள் அனுமதி தேவை. நீங்கள் படத்தில் உள்ளது போல் “Allow” மற்றும் “Remember” என்பதைத் தெரிவுசெய்யுங்கள்.
3)
இனிமேல் நீங்கள் “Rec” என்பதைச் சொடுக்குங்கள். இது உங்கள் கருத்தைப் பதிய ஆரம்பிக்கு்ம். இதை அழுத்திய பின் நீங்கள் பேசத் தொடங்கலாம்.
4)
“Rec” ஐ அழுத்தி பேசத் தொடங்கவும், கீழுள்ள படம் போல் உங்கள் பேச்சுச் சத்தத்தின் வலிமைக்கேற்ப அந்த நீல நிற பட்டை நீண்டு சுருங்கும். உங்கள் கருத்தை பேசி முடித்ததும் “Stop” என்பதைச் சொடுக்குங்கள்.
5)
இப்போது உங்களுக்கு மூன்று தெரிவுகள் கொடுக்கப்படும்.
நீங்கள் தற்போது பதிவுசெய்த உங்கள் கருத்தை மீள் கேட்க “Playback” ஐ அழுத்தலாம்.
நீங்கள் தற்போது பதிவுசெய்த உங்கள் கருத்தை அழித்து மீண்டும் பதிவு செய்ய “Re-Record” ஐ அழுத்தலாம்.
நீங்கள் தற்போது பதிவுசெய்த உங்கள் கருத்தை சேமிக்க “Save” ஐ அழுத்தலாம்.
6)
“Save” ஐ அழுத்தியவுடன் கீழுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு தொடுப்பு கருத்துப் பெட்டிக்குள் தோன்றும். அதை எந்தவித மாற்றமும் செய்யாதீர்கள். அது தான் நீங்கள் தற்போது பதிவுசெய்த உங்கள் ஒலி (அ) காணொளி கருத்து. உங்களுக்கு வேண்டுமென்றால், அதற்குக் கீழ், மேலும் ஏதாவது தட்டச்ச விருப்பமென்றால், தமிழிலோ (அ) ஆங்கிலத்திலோ தட்டச்சலாம்
7)
“Submit Comment” பொத்தானை அழுத்தி உங்கள் கருத்தை அனுப்புங்கள்.
அவ்வளவுந் தான்!
எங்கே ஒரு ஒலி (அ) காணொளிக் கருத்தொன்றை விட்டுப் பரிசோதித்துப் பாருங்களேன். கையோடு உங்களுக்கென்றே ஆன ஒரு தமிழ்ப்பதிவு ஒன்றையும் ஆரம்பிக்க கீழுள்ள படத்தைச் சொடுக்குங்கள்.
காணொளிக் கருத்தைக் காட்டு