மின்னஞ்சலிடுகை

 • உங்கள் மின்னஞ்சலில் :start என்று குறித்துவிட்டு உள்ளடக்கத்தை எழுதினீர்கள் என்றால், இந்த சொற்றொடருக்கு முன் என்ன இருந்தாலும் அவை பதியப்படமாட்டாது.
 • எந்த வகைக்குள் உங்கள் இடுகை சேரவேண்டும் என்று மின்னஞ்சலின் தலைப்பு [subject] பகுதியில் : [இருபுள்ளி/ colon] உபயோகித்து தெரிவிக்கலாம்.
 • ஒரு வகையின் பெயரில் பகுதியை இட்டீர்கள் என்றால், அந்த சொற்றொடரில் தொடங்கும் முதல் வகைக்குள் உங்கள் இடுகை சேர்க்கப்படும்.
<Subject> கவி: என்னாசை

என்று இட்டீர்கள் என்றால், கவிதை என்னும் வகைக்குள் சேர்க்கப்படும் [அப்படியான வகை உங்கள் வலைப்பதிவில் ஏற்கனவே இருந்தால்].

 • மேலே கூறப்பட்ட அத்தனையும் நீங்கள் [] உபயோகித்தாலும் செய்யலாம்.
<Subject> [கவி] [தமி] [வலை] எனது தலைப்பு

என்று குறிப்பிட்டீர்கள் என்றால், கவிதை, தமிழ், வலைப்பதிவு என்னும் வகைக்குள் சேர்க்கப்படும் [அப்படியான வகைகள் உங்கள் வலைப்பதிவில் ஏற்கனவே இருந்தால்].

 • இவற்றை நீங்கள் -‍ சய அடையாளத்தை உபயோகித்தும் அடையலாம்.
<Subject> -கவி -தமி -‍வலை எனது தலைப்பு
 • மின்னஞ்சலில் comments:X என்று குறிப்பிடுவதால் உங்களால் கருத்துக்களை கட்டுப்படுத்த முடியும்.
comments:0 ‍ எந்தக் கருத்துக்கும் அனுமதியில்லை
comments:1 ‍ கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
comments:2 ‍ அடடா இல் பதிவுசெய்த பயனர்கள் மட்டும் கருத்துத் தெரிவிக்கலாம்
 • ஏதாவது இலவச மின்னஞ்சல் தளங்களில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினால், அவர்களின் முத்திரையை இறுதியாக இடுவார்கள். அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. Hotmail, Yahoo Mail போன்ற மின்னஞ்சல் தளங்கள் தங்கள் முத்திரையையும் சேர்க்கும். இவற்றை உங்கள் இடுகையில் தோன்றாமல் தடுக்க, அந்த முத்திரைகள் எந்த எழுத்துக்களில் தொடங்குகிறது என்பதை மின்னஞ்சலிடுகை முகாமைப்படுத்தும் இடத்தில் [Options ==> Configure Postie==>Signature Patterns] வலைப்பதிவு ஆளுநர் குறிப்பிட்டால், அவை உங்கள் இடுகையில் தானாக அகற்றப்பட்டுவிடும்.
 • உங்கள் மின்னஞ்சலை HTML ஆகவும் Plain Text ஆகவும் இருமுறை அனுப்பினீர்கள் என்றாலும் அடடா இன் மின்னஞ்சலிடுகை தானாக அதைக் கண்டுபிடித்து ஒரு இடுகையையே இடும்.
 • இடகை நேரதாமதமாக தோன்றவும் வைக்கலாம். அதாதவது ஒரு சில மணித்தியாலமோ (அ) நாட்களோ தாமதமாக உங்கள் இடுகை தோன்ற உங்கள் மின்னஞ்சலில் இப்படி குறிக்கவும்.
delay:1d ‍ - 1 நாள் தாமதமாக‌
delay:1h ‍ - 1 மணித்தியாலம் தாமதமாக
delay:1m ‍ - 1 நிமிடம் தாமதமாக‌
delay:1d2h4m ‍ - 1 நாளும் 2 மணீத்தியாளங்களும் 4 நிமிடமும் தாமதமாக‌
 • உங்கள் வலைப்பதிவில் ஏற்கனவே ஒரு பயனராக பதியாத மின்னஞ்சலில் இருந்தோ (அ) வலைப்பதிவு ஆளுநர் அனுமதித்த மின்னஞ்சல் பட்டியலில் இல்லாத மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தால், அது வலைப்பதிவு ஆளுநருக்கு அப்படியே அனுப்பப்படும் [Options ==> Configure Postie==> Authorized Addresses].
 • உங்கள் மின்னஞ்சல் அனுப்பு தளத்தில் மின்னசலுக்கு தலைப்புக் கொடுக்க இயலாதென்றால், உங்கள் தலைப்பை மின்னஞ்சலின் முதல் வரியாக இரண்டு # குறியீட்டிற்குள் இடவும்.
#உங்கள் தலைப்பு# 
 • மின்னஞ்சலின் தலைப்பிலோ (அ) உள்ளடக்கத்திலோ HTML ‍அனுமதிக்கலாமா வேண்டாமா என்று வலைப்பதிவு ஆளுநர் தெரிவு செய்யலாம் [Options ==> Configure Postie==> Allow HTML In Mail Subject].
 • மின்னஞ்சலில் இடுகையை அனுப்பும் போது தலைப்பு ஏதும் இடவில்லை எனில், இயல்நிலை [default ] தலைப்பாக உபயோகிக்க வலைப்பதிவு ஆளுநர் தெரிவுசெய்யலாம். [Options ==> Configure Postie==> Default Title].
 • இதேபோல், இயல்நிலை வகையையும் வலைப்பதிவு ஆளுநர் தெரிவுசெய்யலாம்.[Options ==> Configure Postie==> Default post by mail category].
Tags: